More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Saturday 1 August 2015

Best operating system used for Hacking

 

வணக்கம் நண்பர்களே இன்று நாம் ஹாக்கிங் செய்ய எந்த வகையான இயங்குதளம் மிக பயனுள்ளதாக இருக்கும் என்று பார்க்கலாம்.முதலில் ஹாக்கிங் என்றால் என்னவென்றும் ஹாக்கர்ஸ் என்பவர் யார் என்பதையும் நீங்கள் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.
ஹாக்கிங் என்பது ஒரு கலை அதனை யார் வேண்டும் என்றாலும் கற்றுகொள்ளலாம் அதற்கு தேவை ஆர்வம் மட்டுமே.உங்களின் மனதில்  தோன்றலாம் எங்கு நான் ஹாக்கிங்  படிப்பது எந்தவகையான கருவிகளை உபயோகிப்பது என்று.உங்கள் அனைவருக்கும் என்னுடைய பதில் ஒன்றுதான்.ஹாக்கிங் கற்றுத்தரப்படும் என்று பொய்யாக விளம்பரம் செய்யும் கணினி பயிற்சி மையங்களை நம்பி ஏமாறாதீர்கள்.மாறாக நம் கைவசம் இணையம் உள்ளது அதில் கற்று கொள்ள முடியாததையா கணினி பயிற்சி மையத்தில் கற்று தர போகிறார்கள்.ஹாக்கர்ஸ் என்பவர்கள் அனைவரும் தவறானவர்கள் என்ற எண்ணம் உங்கள் மனதில் இருந்தால் அதை உடனே அகற்றிவிடுங்கள் ஏன் என்றால் ஹாக்கர் என்பவர் கணினியின் செயல்பாடுகளை தரவாக அறிந்தவர் அக்கணினி எவாரெல்லாம் செயல்படுகின்றது என்று தெளிவாக கற்று கொண்டவர்.அதன் செயல்பாடுகளை மாற்றி அமைக்கவும் முடக்கவும் இவரால் முடியும்.நண்பர்களே இந்த ஹாக்கர்ஸ் மட்டும் இல்லை என்றால் இன்று நாம் உபயோகிக்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் இல்லை என்றுதான்  கூர வேண்டும்.ஆம் நண்பர்களே இன்று நாம் உபயோகிக்கும் முகநூல்(FACEBOOK) இதன் உரிமையாளர் மார்க் ஜூகர் பெர்க் ஒரு ஹாக்கர் ஆவார்.நாம் அனைவரின் விருப்ப தேர்வான விண்டோஸ் இயங்குதளம் அதன் உரிமையாளர் பில்கேட்ஸ் ஒரு ஹாக்கர் ஆவார் இவர்களை போன்று நிறைய நபர்களை பட்டியலிடலாம்.எனவே நீங்களும் இவர்களைவிட மிகப்பெரிய ஹாக்கர் ஆக வேண்டும் என்றால் உங்களின் ஆர்வத்தை தொழில்நுட்பத்தின் மீது திருப்புங்கள்.சரி நண்பர்களே ஹாக்கிங் செயல்படுத்த எந்த வகையான இயங்குதளம் அருமையாக இருக்கும் என என்னுடைய அனுபவத்தை கொண்டு கூறுகிறேன் நீங்கள் விண்டோஸ் பயனாளராக இருந்தால் லினக்ஸ் இயங்குதளத்திற்கு மாறவேண்டிய தருணத்திற்கு வந்துவிட்டீர்கள் ஆம் நண்பர்களே உலக அளவில் லினக்ஸ் இயங்குதளத்தினை கொண்டே ஹாக்கிங் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.அப்படிப்பட்ட லினக்ஸ் இயங்குதளங்கள் சிலவற்றை நான் கீழே கொடுத்துள்ளேன்.


1.  Kali Linux :-

Best-operating-system-used-for-Hacking1 

Kali Linux  ஐ நான் முதலில் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.இதுதான் ஊடுருவல் சோதனையில் (penetration testing) முன்னிலையில் உள்ள இயங்குதளம்.இந்த இயங்குதளத்தின் சிறப்பு என்னவென்றால் இதில் உள்ள ஹாக்கிங் கருவிகள் யாவும் பாதுகாப்பு விரும்பிகளால் அதிக அளவில் உபயோகிக்கபடுகின்றது.இதில் உள்ள ஹாக்கிங் கருவிகள் யாவும் ஹாக்கிங்ல் கைதேர்ந்த வல்லுனர்களால் உருவாக்கப்பட்டவை அவை அனைத்தும் திரமூல பயன்பாட்டு உரிமத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 300க்கும்  அதிகமான கருவிகள் பதிந்தே தரப்படுகிறது.மேலும் புதிய ஹாக்கிங் கருவிகள் ஒவ்வொரு நாட்களும் புதிப்பிக்கப்பட்டு அதன் மாற்று பதிப்பு நமக்கு கிடைக்கின்றது.நான் Kali Linux தான் உபயோகிக்கின்றேன்.கிழே உள்ள இணைப்பில் Kali Linux ஐ தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
Download Now

2. BackTrack 5r3 :-

Best-operating-system-used-for-Hacking1 
 BackTrack 5r3 ஐ பற்றி கூறியே ஆகவேண்டும் ஆம் நண்பர்களே நீண்ட நாட்களாக பாதுகாப்பு மற்றும் ஊடுறுவல் சோதனைதுறையில் தடம் பதித்த இயங்குதளம் என்றே கூர வேண்டும்.அவ்வலவுதூரம் இதன் செயல்பாடுகள் பாதுகாப்பு துறைக்கு பயனளித்துள்ளது.BackTrack முதலில் live Linux வழங்கலாக Whoppix, IWHAX, and Auditor என்ற பெயரினைகொண்டு வெளிடப்பட்டது.இதுவே இன்றளவும் உலகில் உள்ள ஊடுருவல் சொதனையாலர்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.கீழே உள்ள இணைப்பில் இருந்து தரவிறக்கி கொள்ளலாம்.
Download Now

3. BackBox Linux :-

Best-operating-system-used-for-Hacking1
BackBox என்பது ஒரு லினக்ஸ் வழங்கல் ஆகும் இது உபுண்டு லினக்ஸ் ஐ அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது இதுவும் ஊடுருவல் சோதனை மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள பயன்படுகிறது.இதன் ஒவ்வொரு பதிப்பும் நிலையான பதிப்பாகவே வெளியிடப்படுகின்றது.கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கி கொள்ளவும்.
Download Now

4. Samurai Web Testing Framework :-

Best-operating-system-used-for-Hacking1
Samurai Web Testing Framework என்பது இணைய பக்கங்களை ஊடுருவல் சோதனை செய்துபார்ப்பதர்காக நிகழ்நிலை லினக்ஸ் சூலலை வழங்குகின்றது.இதன் வட்டினை உபயோகிதலின் மூலம் நாம் மிக சிறப்பான இணையபக்க ஊடுருவல் சோதனை அனுபவத்தை பெற முடியும்.இதன் கருவிகள் அனைத்தும் பாதுகாப்பு சோதனை பயிற்சிக்காக உபயோகிக்க படுகின்றது.கீழே உள்ள இணைப்பில் தரவிறக்கி கொள்ளவும்.
Download Now

5. NodeZero Linux :- 

Best-operating-system-used-for-Hacking1
NodeZero Linux ஊடுருவல் சோதனை மற்றும் பாதுகாப்பு துறையின் சிறப்பு வாய்ந்த இயங்குதளம் ஆகும்.இதனை கொண்டு நம்முடைய எண்ணங்கள் அனைத்தையும் நிறைவேற்றி கொள்ள முடியும்.அனைத்து வகையான ஹாக்கிங் கருவிகளும் ஒரே இயங்குதளத்தில் பதிந்து தரப்படுகிறது.இதன் சிறப்பம்சமே இதன் ஒவ்வொரு பதிப்பும் நிலையான பதிப்பாக வெளியிடப்படுகின்றது.மேலும் ஹாக்கிங் ஈடுபாட்டில் இது வலிமையான இயங்குதளமாகும்.கீழே உள்ள இணைப்பினை பயன்படுத்தி தரவிறக்கி கொள்ளவும் .
Download Now

6.  Knoppix STD :-

Best-operating-system-used-for-Hacking1 

Knoppix STD என்பது லினக்ஸ் இயக்கமுறைமை அல்ல லினக்ஸ் ஐ அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட பாதுகாப்பு கருவி ஆகும்.இதில் உள்ள கருவிகள் யாவும் திரமூல பயன்பாடாக வெளியிடப்படவில்லை ஒருசில கருவிகள் மட்டுமே திரமூல பயன்பாடாக வெளியிடப்பட்டுள்ளது.இது ஒரு நிகழ் வட்டாக வெளியிடப்பட்டுள்ளது இதனை உங்களின் கணினியில் பதிந்து உபயோகிக்க அவசியமில்லை உங்களிடம் ஒரு குறு வட்டு இருந்தாலே போதுமானது.கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கி கொள்ளவும்.
Download now

7.  CAINE :-

Best-operating-system-used-for-Hacking1
CAINE (Computer Aided INvestigative Environment) என்பது ஒரு இத்தாலி குனு/லினக்ஸ் நிகழ்நேர வழங்கலாகும்.இது ஒரு Digital Forensics
CAINE என்ற அமைப்பின் திட்டம்(ப்ராஜெக்ட்)ஆகும்.இது நமக்கு எளிமையான இயக்க சூழலை நமக்கு வழங்குகின்றது.கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
Download Now

8. Parrot Security Os:-

 
Parrot Security OS 
Parrot Security OS என்பது பாதுகாப்பு சம்பந்தமானசோதனை செய்ய பயன்படும் இயங்குதளம் ஆகும். மேலும் இது ஊடுருவல் சோதனைக்காகவும்,கணினி தடயவியளுக்காகவும்(Forensic) பயன்படுகின்றது.இதனை கொண்டு மேககணினி(Cloud computing) செயல்பாடுகளில் ஊடுருவல் சோதனை செய்ய முடியும். இது Debian வழங்கலை கொண்டு Frozenbox network ஆல் வடிவமைக்கப்பட்டது.கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கி கொள்ளவும்.

பயனுள்ள பதிவாக இருந்தால் பின்னூட்டம் அளிக்கவும்....!!!

நன்றி.   

0 on: "Best operating system used for Hacking"

Ads Inside Post