More Categories

statistics

Theme images by Storman. Powered by Blogger.

Recent

Comment

Subscribe

Popular

Tweet's

Saturday 27 June 2015

Linux Basic Commands

கல்லூரியில்  இரண்டாம் ஆண்டு முதல் பருவத்தின்  போது லினக்ஸ் எமக்கு செய்முறை பாடமாக இருந்தது.இன்று ஓராண்டு கடதுவிட்ட நிலையில் எமது அருமை சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இந்தவருடம் இரண்டாம் வருடம் சென்றுள்ளனர்.
லினக்ஸ் என்றால் மிகவும் பயப்படுகின்றனர் அவர்களின்  போக்கும் விதமாக நானும் பல வழிகளில் லினக்ஸ் பற்றிய  விழிப்புணர்வை    அவர்களுக்கு ஏற்படுத்தி வருகிறேன்.சரி விசயத்திற்கு வருகிறேன் லினக்ஸ் இயங்குதளத்தை  நாம் இரு வழிகளில் இயக்கலாம் இடைமுகப்பு மற்றும் கட்டளைகள் மூலமாகவும் இயக்கலாம்.அக்கட்டளைகள் சில இங்கே கொடுத்துள்ளோம்.பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

கட்டளை
விளக்கம்
1vmstatவிர்சுவல் நினைவகம் (virtual memory) பற்றிய புள்ளி விவரங்களை அளிக்கும்
2iostatசாதனங்கள் (devices) மற்றும் கடின வட்டு பகிர்வுகளுக்கான (Hard disk partitions) சிபியூ மற்றும் உள்ளீடு வெளியீடு I/O புள்ளி விவரங்களை அளிக்கும்
3sarகணினி செயல்பாடுகள் பற்றிய அறிக்கை அளிக்கும்
4psகணினியில் தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் ப்ராசஸ் (process) பற்றிய விவரங்களை அளிக்கும்
5freeகணிணியில் உள்ள பயன்படுத்தப்பட்ட மற்றும் மீதம் உள்ள நினைவகம் (memory) பற்றி தெரிவிக்கும்.
6topலினக்ஸ் கணிணியில் நடந்து கொண்டிருகும் பணிகள் பற்றி தெரிவிக்கும்
7compgenகணிணியில் கிடைக்கக்கூடிய அனைத்து கட்டளைகள், உள்ளமைந்த (built-in) கட்டளைகள், அலைஸ்(alias) கட்டளைகள், பாஷ் முக்கிய சொற்கள் (bash keywords), பன்க்ஷன் -களை(functions) தெரிவிக்கும்.
8unameலினக்ஸ் கணிணி பற்றிய தகவல்களை தரும்.
9ifconfigநெட்வர்க் இடைமுகம்(interface) கட்டமைக்கும்.
10rebootகணிணியை மீண்டும் துவக்க, நிறுத்த பயன்படும்.
11wcஒவ்வொரு கோப்பிலும் உள்ள புதிய வரிகள், வார்த்தைகள், மற்றும் பைட் எண்ணிக்கை பற்றி தெரிவிக்கும்.
12niceமுன்னுரிமை மாற்றும் திட்டமிடலுடன் ஒரு நிரலை செயல்படுத்துதல்.
13reniceசெயல்பட்டு கொண்டிருக்கும் ப்ராசஸ்களின் முன்னுரிமைகளை மாற்றுவதற்கு பயன்படும்.
14teeநிலையான உள்ளீடுலிருந்து (Input) படித்து, நிலையான வெளியீடு(output) மற்றும் கோப்புகளில் எழுதும்.
15whichஒரு கட்டளையின் இருப்பிடத்தை கண்டுபிடிகும்.
16statகோப்பு மற்றும் கோப்புகளின் கட்டமைப்புகள் நிலை பற்றி தெரிவிக்கும்.
17uptimeகணிணி எவ்வளவு நேரம் செயல்பட்டுக் கொண்டிருகிறது என்பதை தெரிவிக்கும்.
18wகணினியில் யார் உள்நுழைந்து இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதை தெரிவிக்கும்.
19serviceசிஸ்டம் V இனிட் ஸ்கிரிப்ட் செயல்படுத்தும்.
20netstatநெட்வொர்க் இணைப்புகள், றௌடிங் அட்டவணைகள், இடைமுக (interface) புள்ளிவிவரங்கள், masquerade இணைப்புகள் , முல்டிகாஸ்ட் உறுபினர்கள்(multicast membership) பற்றி தெரிவிக்கும்.
21aliasநீண்ட மற்றும் அடிக்கடி பயன்படுத்தப்படும் கட்டளைகளுக்கு குறுகிய வடிவம் அளிக்க பயன்படும்.
22unaliasகட்டளைகளுக்கான குறுகிய வடிவ பெயர்களை (alias) நீக்க பயன்படும்.
23dfகோப்பு அமைப்புகள் வட்டில் இட பயன்பாடு பற்றி தெரிவிக்கும்.
24duகோப்புகளின் இட பயன்பாடு பற்றி தெரிவிக்கும்.
25setenforceசெக்யூரிட்டி என்ஹன்செடு லினக்ஸ் (selinux) செயல்படும் முறையை மாற்றுவதற்கு பயன்படும்
                                                                                                                    - தொடரும்.
     

0 on: "Linux Basic Commands"

Ads Inside Post